திருக்குறள்
திருக்குறளின் ஆசிரியர் - திருவள்ளுவர்
திருக்குறள் எவ்வாறு பிரியும்? – திரு + குறள்
இதில் திரு என்னும் அடைமொழி குறிப்பது தெய்வத் தன்மை, செல்வம், மேன்மை, சிறப்பு, அழகு
திருவள்ளுவரின் காலம்? - கி.மு.31 ஆம் நூற்றாண்டு
திருவள்ளுவர் பிறந்த ஊர் எது? – மயிலாப்பூர் ( சென்னை)
திருவள்ளுவரின் பெற்றோர் பெயர் என்ன? – ஆதிபகவன்
திருவள்ளுவரின் மனைவி பெயர் என்ன? – வாசுகி
திருவள்ளுவரின் சமயம் என்ன? – சமண சமயம்
திருவள்ளுவரின் வேறு பெயர்கள் என்ன? – செந்நாப்போதார், தெய்வப்புலவர், நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபங்கி, பெருநாவலர், பொய்யில் புலவர், தேவர்
திருக்குறளுக்கு வழங்கப்படும் சிறப்புப்பெயர்கள் என்ன?
- முப்பால், பொதுமறை, தமிழ்மறை,பொருளுரை, உலகப்பொதுமறை, தமிழர் திருமறை, அறவிலக்கியம் உத்திரவேதம், தெய்வநூல், வாயுறை வாழ்த்து, திருவள்ளுவப்பயன், பொய்யாமொழி, இயற்கை வாழ்வில்லாம், முதுமொழி,
அறத்துப்பால் - ( 38 -அதிகாரம் ) 380 குறட்பாக்கள்
பாயிரவியல் – [ 1 முதல் 40 குறள்] 4 அதிகாரம்
இல்லறவியல் – [ 41 முதல் 240 குறள் ] 2௦ அதிகாரம்
துறவறவியல் – [ 241 முதல் 370 குறள் ] 13 அதிகாரம்
ஊழியல் – [ 371 முதல் 380 குறள் ] 1 அதிகாரம்
பொருட்பால் ( 7௦ -அதிகாரம் ) 7௦௦ குறட்பாக்கள்
அரசியல் - [ 381 முதல் 630 ] 25 அதிகாரம்
அங்கவியல் - [ 631 முதல் 950 ] 32 அதிகாரம்
ஒழிபியல் - [ 951 முதல் 1080 ] 13 அதிகாரம்
காமத்துப்பால் ( 25 –அதிகாரம் ) 25௦ குறட்பாக்கள்
களவியல் - [ 1081 முதல் 1150 ] 7 அதிகாரம்
கற்பியல் - [ 1151 முதல் 1330 ] 18 அதிகாரம்
மொத்த அதிகாரம் – 133
மொத்த இயல்கள் – 9
மொத்தபாடல்கள் – 133௦
1 அதிகாரம் – 1௦ பாடல்கள்
திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்? – 42,194
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்? – மணக்குடவர்
திருக்குறள் உரையாசிரியர்களுள் 1௦-வது உரையாசிரியர்? – பரிமேலழகர்
ஃ ஆயுத எழுத்து திருக்குறளில் எத்தனை இடங்களில் வரும்? – 14 இடம்
திருக்குறளின் சிறப்புபற்றிக் கூறும் நூல்கள்
1. திருக்குறளையும், திருவள்ளுவரையும் பழந்தமிழ் புலவர்கள் பாராட்டி பாடிய நூல் எது? – திருவள்ளுவமாலை
2. செருமன் நாட்டு பேரறிஞர் ஆல்பர்ட் சுவைட்சதர் திருக்குறளின் பெருமையை “இந்திய வளர்ச்சி சிந்தனை” என்ற நூலில் சிறப்பாக எடுத்து ஆராய்ந்து விளக்கியுள்ளார்
3. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, “வள்ளுவர் செய் திருக்குறளை மாறுவறநன் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக்கு ஒரு நீதி” என்று பாராட்டுகிறார்
4. “எல்லாப் பொருளும் இதன்பால் உள இதன் பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்” என்று பாராட்டியவர் யார்? - மதுரைத் தமிழ் நாகனார்
5. குரலின் சிறப்பை உணர்த்தும் வேறு நூல்கள்:
சிவசிவ வெண்பா, தினகர வெண்பா, வடமலை வெண்பா,
சோமேசர் முதுமொழி வெண்பா, குமரேச வெண்பா,
6. எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக்கூரியவர் யார்? – திருவள்ளுவர்
7. உலகப் பண்பாட்டிற்குத் தமிழினத்தின் பங்களிப்பாக அமைந்த நூல் எது?– திருக்குறள்
8. தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல் என அழைக்கப்படுவது எது?- திருக்குறள்
9. அறம், பொருள் இன்பம் என முப்பாலும் தப்பாமல் வந்த குறள்
“அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்”
10. திருவள்ளுவர் எந்த சங்க காலத்தை சேர்ந்தவர் என்னும் செவிச் செய்திகள் உள்ளன? – கடைச் சங்ககாலம்
11. திருவவள்ளுவரின் புகளை உலகறியக் செய்யும் வகையில் சென்னைக் கோடம்பாக்க்கத்தில் வள்ளுவர் கோட்டம் என்னும் கலைக்கூடம் அமைக்கும் பணி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? - 1973
12. இந்த வள்ளுவர் கலைக்கூடம் எந்த வடிவில் அமைக்கப்பட்டுள்ளது?
13. வள்ளுவர் கோட்டத்தில் திருவள்ளுவரின் சிலை எந்த வடிவ கருவறையில் அமைந்துள்ளது? – எண்கோண வடிவ
14. வள்ளுவர் கோட்டத்தில் 133௦ குறட்பாக்களும் வெவ்வேறு நிற பளிங்குக் கற்களால் செதுக்கப்பட்டுள்ளன?
அறத்துப்பால் – கருநிற பளிங்கு கல்லிலும்
பொருட்பால் – வெண்ணிறப் பளிங்கு கல்லிலும்
இன்பத்துப்பால் – செந்நிறப் பளிங்கு கல்லிலும்
15. இங்கிலாந்து நாட்டு மகாராணியார் விக்டோரியா காலையில் கண் விழித்ததும் படித்த நூல் எது? – திருக்குறள்
16. திருவள்ளுவரின் படத்தை வரைந்தவர் – புதுச்சேரி வேணுவர்மா
17. திருக்குறளில் குறள் என்பதன் பொருள்?
குறுமை, ஈரடி, உயரமுள்ள குள்ளன், பூதன், சிறுமை
18. தமிழ் நூல்களில் திரு என்ற அடைமொழியுடன் வந்த முதல் நூல் எது?– திருக்குறள்
19. ஆங்கிலத்தில் மட்டும் திருக்குறளை மொழிபெயர்த்தவர்களின் எண்ணிக்கை? – நாற்பது பேர்
20. திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு? - 42,194
21. திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247 இல் இடம் பெறாத எழுத்துக்கள் எத்தனை?– 37
22. திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட எழுத்து எது? னி – (17௦5)
23. திருக்குறளில் ஒரே ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் என்னென்ன? – ளீ, ங
24. திருக்குறள் இது வரை எத்தனை மொழிகளில் வெளிவந்துள்ளது? - 26
25. இறைவன் மனிதனுக்கு சொன்னது - கீதை
26. மனிதன் இறைவனுக்கு சொன்னது – திருவாசகம்
27. மனிதன் மனிதனுக்கு சொன்னது – திருக்குறள்
28. திருவள்ளுவருக்கு கோவில் அமைந்துள்ள இடம் எது? – மைலாப்பூர்
29. வள்ளுவர் கோட்டம் எங்கு அமைந்துள்ளது? - நுங்கம்பாக்கம்
30. தமிழகத்தின் மிக உயர்ந்த சிலையான திருவள்ளுவர் சிலை எங்கு அமைந்துள்ளது? – கன்னியாகுமரி ( உயரம் 133 அடி)
31. திருவள்ளுவராண்டு எவ்வாறு கணக்கிடப்படுகிறது? – கி.மு.31ஐ க் கொண்டு
2௦19 ஆண்டுக்கான திருவள்ளுவர் ஆண்டு என்ன? – 2௦19 + 31 = 2௦5௦
32. திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் நாள் – தை 2
33. திருக்குறள் என்பது எந்த வகை நூல்? - பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று. அறநூல் (அ) நீதிநூல்
No comments:
Post a Comment