WELCOME TO TOP7TAMIL, TNPSC EXAM, TRB EXAM, POLICE EXAM, TNTET EXAM, RRB EXAM, LAB ASSISTANT EXAM STUDY NOTES AND ONE MARK QUESTION அனைத்தும் படிக்க சிறந்த தளம்

Tuesday, June 22, 2021

காமராஜர் பற்றிய முக்கியமான தகவல்கள்

 

 

                            1. காமராசர்



இளமைபருவம்:

·         காமராசர் அவர்கள் 1903 ஜூலை 15 ஆம் தேதி விருதுப்பட்டியில் (விருதுநகர்) பிறந்தார்.

·         இவரின் பெற்றோர்: குமாரசாமி, சிவகாமி அம்மையார்.

·         இவரின் இயற்பெயர் காமாட்சி (குலச்சாமியின் நினைவாக இப்பெயர் வைக்கப்பட்டது.

·         இவரை 'ராஜா' என்று பெற்றோர் அழைத்தனர். பின்னர் காமாட்சி ராஜா என்று அழைக்கப்பட்டார். இப்பெயரே பின்னர் சுருக்கமாக காமராஜ் என்று ஆனது பிற்காலத்தில் காமராசர் என்று அழைக்கப்பட்டார்.

·         இவர் பயின்ற பள்ளிகள்: ஏனாதி நாயனார் வித்யாசாலா மற்றும் சத்திரியவிதியாசாலா.

·         குடும்பத்தின் பொருளாதார சூழல் காரணமாக இவர் ம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

 

விடுதலைப்போராட்டம்:

·         இவர் 1919 இல் காங்கிரஸில் இணைந்தார்.

·          இவர் 1920 இல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டார்.

·         இவர் 1922 இல் விருதுநகர் நகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் காங்கிரஸ் தலைவர் எஸ்.சத்தியமூர்த்தியை சந்தித்தார். அவரை தனது அரசியல் குருவாகக் கருதினார்.

·         இவர் வைக்கம் சத்யாகிரகம் (1924) மற்றும் சுசீந்தரம் ஆலயநுழைவுப் போராட்டம் போன்றவற்றில் கலந்துகொண்டார்.

·         இவர் 1929இல் சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆனார்.

·          1927 இல் நடைபெற்ற வாள்சத்யாகிரகத்தில் இவர் கலந்து கொண்டார்.

·          1927 இல் காமராசர் அவர்களால் நேருவின் தலைமையில் இந்தியக் குடியரசுக் காங்கிரஸ் என்னும் மாநாடு விருதுநகரில் நடத்தப்பட்டது.

·         காங்கிரஸ் இயக்கத்தை தமிழகத்தின் கிராமாபுறங்களில் வளர்ப்பதற்கு காமராசர் கிராமங்களில் பரப்புரை இதற்கு காமராசருடன் இணைந்து செயல்பட்டவர்கள் 'திருவண்ணாமலை, அண்ணாமலைப்பிள்ளை மற்றும் இராஜபாளையம் P.S.குமாரசாமிராஜா (இவர் பிற்காலத்தில் முதலமைச்சர் ஆனார்.)

·         1928 இல் சைமன் குழு மதுரைக்கு வந்த பொழுது அதனை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் ஜார்ஜ் ஜோசப்புடன் இணைந்து காமராசர் பங்கேற்றார்.

·         1930 இல் வேதாரண்யம் உப்புசத்தியாகிரகத்தில் காமராசர் கலந்து கொண்டதால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதுவே காமராசரின் முதல் சிறைவாசம் ஆகும். பின்னர் காந்தி - இர்வின் ஒப்பந்தத்தின் (1931, மார்ச் 5) படி சத்யாகிரகிகள் விடுவிக்கப்பட்டனர்.

·         1936 இல் காரைக்குடியில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தேர்தலில் எஸ்.சத்யமூர்த்தி தலைவராகவும், காமராசர் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

·         இவர் 1937 இல் சென்னை மாகாண சட்டமன்றத்திற்க்கு நடைபெற்ற தேர்தலில் சாத்தூர் தொகுதியில் இருந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 மாநிலத் தலைவர்: 

·         காமராசர் 1940 இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

·         இவர் 1940 இல் தனிநபர் சத்யாகிரகப் போராட்டம் தொடர்பாக காந்தியை சந்திக்க வார்தாவுக்கு செல்லும் வழியில் கரூரில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

·         இவர் சிறையில் இருக்கும் போதே 1941 இல் விருதுநகர் நகராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். (பின்னர் அதனை ராஜினாமா செய்கிறார்).

·         1942 ஆம் ஆண்டு பம்பாயில் வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட காமராசர் பின்னர் தமிழகம் திரும்பும். போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் (முதலில் அமராவதி சிறை பின்னர் வேலூர் சிறை சிறைதண்டனை 3 ஆண்டுகள்).

·         1946 இல் சென்னை மாகாண சட்டமன்றத்திற்க்கு நடைபெற்ற தேர்தலில் சாத்தூர் தொகுதியிலிருந்து காமராசர் வெற்றிபெற்றார்.

·         இவர் 1946 இல் ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு நிர்ணயசபையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

·         இந்தியா விடுதலை பெற்றதும் இவர் எஸ்.சத்யமூர்த்தியின் வீட்டிற்கு சென்று தேசியக் கொடியை ஏற்றினார்.

·         இவர் 1947 இல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


முதல் திருத்தத்தின் மூலவர்:

 

·         1928 ஆம் ஆண்டு முதல் சென்னை மாகாணத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் பின்பற்றப்பட்டு வந்த வகுப்பு வாரி இட ஒதுக்கீட்டு அரசாணை ஆனது இந்திய அரசியலமைப்பிற்க்கு எதிரானது. என்று செண்பகம் துரைராஜன் வழக்கில் 1950 இல் சென்னை உயர்நீதிமன்றமும் மேற்கண்ட தீர்ப்பை உறுதிசெய்தது.

·         இதனால் பிற்படுத்தப்பட்டோர் உரிமைகள் பறிக்கப்படுவதாக தமிழக மக்கள் எண்ணினார் தமிழகத்தில் ஒரு பதட்டமான சூழல் உருவாகியது.

·         அப்பொழுது காமராசர் அவர்கள் தமிழக காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் பிரதமர் நேருவிடம் தமிழகத்தின் சூழ்நிலையை விளக்கி வகுப்பு வாரி உரிமை தொடர அரசமைப்பில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார் காமராசரின் ஆலோசனையை ஏற்றுக் கொண்ட நேரு அவர்கள் முதலாவது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தை (1951) கொண்டு வந்தார்.

·         1952 இல் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு 375 இடங்களில் 15இல் மட்டுமே வெற்றி கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ராஜாஜி சில கட்சிகளின் ஆதரவுடன் மாநில முதலமைச்சர் ஆனார். இத்தேர்தலில் காமராசர் ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

·         1953 இல் முதலமைச்சர் ராஜாஜி மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம் என்னும் ஒரு புதிய கல்வி முறையை தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் இது குலக்கல்வித் திட்டம் என பலரால் எதிர்க்கப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்குள்ளும் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ராஜாஜி தனது முதலமைச்சர் பதவியிலிருந்து 1954, மார்ச் 25 இல் விலகினார்.

முதலமைச்சர்:

 

·         காமராசர் 1954 ஏப்ரல் 13 இல் தமிழ்நாட்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். (முதல் முறை) அப்பொழுது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காரணத்தினால் அதனை ராஜினாமா செய்தார்.

·         காமராசர் முதலமைச்சர் ஆனதும் இதற்கு முன் ராஜாஜியின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களை மாற்றாமல் அப்படியே வைத்துக்கொண்டார்.

·         காமராசரின் அமைச்சரவை (1954)

1)   .பி. ஷெட்டி (சுகாதாரம்)

2)   எம்.பக்தவத்சலம் (வேளாண்மை)

3)   சி.சுப்ரமணியம் (கல்வி)

4)   எம்..மாணிக்கவேலு (வருவாய்த் துறை)

5)   சண்முகராஜேஸ்வரிசேதுபதி (பொதுப்பணித் துறை)

6)   பரமேஸ்வரன் (இந்து அறநிலையத் துறை )

7)   எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் (உள்ளாட்சி)

  • காமராசர் இந்தியாவில் ஆங்கிலக் கல்வி பெறாத முதலாவது முதலமைச்சர் என அப்பொழுது கருதப்படவர் ஆவார்.

  • இராஜாஜி கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தை 1954 மே 18 இல் கை விடுவதாக முதலமைச்சர் காமராசர் அறிவித்தார்.

  •  பின்னர் குடியாத்தம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

  • 1955இல் சென்னைக்கு அருகே உள்ள ஆவடியில் இந்திய தேசிய காங்கிரஸின் கூட்டத் தொடர் நடைபெற்றது. இதை நடத்தும் பொறுப்பு காமராசருக்கு அளிக்கப்பட்டது

1)   கூட்டத் தொடர் நடைபெறும் வளாகம் சத்யமூர்த்திநகர் என்று பெயரிடப்பட்டது

2)   கூட்டத் தொடரின் தலைவர் U.N. தேபர்

3)   கூட்டத் தொடருக்கு சிறப்பு அழைப்பாளர்-யூகோஸ்லாவியா அதிபர் மார்ஷல்டிட்டோ

4)   இதனை முன்மொழிந்தவர் - நேரு

5)   இதனைவழி மொழிந்தவர் - காமராசர்

·         B.C. ராய் அவர்களின் திட்டப்படி 1956 - இல் மத்திய அரசு உருவாக்க முனைந்த தட்சிணப் பிரதேசம் என்னும் முறையை காமராசர் கடுமையாக எதிர்த்தார்.

·         தட்சின் பிரதேசம் என்பது தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரபிரதேசம் ஆகியவற்றை ஒரே நிர்வாக பகுதியாக அமைப்பது ஆகும்.

·         காமராசர் ஆட்சிக் காலத்தின் பொழுது தான் இன்றைய தமிழ்நாடு முழு வடிவம் (நிலப்பரப்பு ரீதியாக) அடைந்தது.

கல்விப்புரட்சி: 

·         பள்ளிக் கல்வியை பாதியிலேயே நிறுத்திய காமராசர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து குழந்தைகளும் கல்வி கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.

·         இதற்காக இவர் துவக்கக்கல்விக்காக செலவிடும் தொகையை இருமடங்காக உயர்த்தினார்.

·         மாணவர்கள் வறுமையின் காரணமாக படிப்பைப் பாதியிலேயே விட்டு விடுவதை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் மக்கள் பங்கேற்புடன் மத்திய உணவுத் திட்டத்தை காமராசர் அறிமுகப் படுத்தினார்

·         காமராசருக்கு முன்பு 1921ல் நீதிக்கட்சித் தலைவர் தியாகராய செட்டி அவர்கள் சென்னை மேயராக இருந்தபொழுது சென்னையில் உள்ள சில மாநகராட்சிப் பள்ளிகளில் மட்டும் மத்திய உணவுத திட்டத்தை அறிமுகப்படுத்தி இருந்தார்.

·         காமராசரின் ஆலோசனையின் பேரில் பொதுக்கல்வி இயக்குநர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் மதிய உணவுத் திட்டத்தை மக்கள் பங்கேற்புடன் கல்வி இயக்கமாக மாற்றினார்.

·         காமராசரின் முதல் மதிய உணவுத் திட்டமானது 1956- ஆம் ஆண்டு பாரதியார் பிறந்த எட்டயபுரத்தில் முதன் முதலாக செயல்படுத்தப்பட்டது.

·         பின்னர் இத்திட்டமானது தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.

·         மதிய உணவுத் திட்டமானது இரண்டு இலக்குகளை குறிக்கோளாகக் கொண்டிருந்தது.

1)   பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தல்

2)   பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றலை குறைத்தல்

·         1957 இல் பள்ளிகள் பற்றிய கணக்கெடுப்புக்கு காமராசர் ஏற்பாடு செய்தார்.

·         1958 இல் காமராசர் சென்னை மாநிலக் கல்வி அறிவுரைக் குழுவை கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் தலைமையில் அமைத்தார்.

·         மதிய உணவுத் திட்டத்திற்கான நிதி உதவியை பெற தமிழகம் முழுவதும் பள்ளி மேம்பாட்டு மாநாட்டினை நடத்திட காமராசர் ஆணை இட்டார்.

·         1958 இல் முதலாவது பள்ளி மேம்பாட்டு மாநாடு கடம்பத்தூரில் (திருவள்ளூர் மாவட்டம்) தொடங்கப்பட்டது.

·          1959 இல் .தெக்கூர் (காரைக்குடி) மற்றும் அடைக்கலப்பு (திருநெல்வேலி) ஆகிய இடங்களில் நடைபெற்ற பள்ளி மேம்பாட்டு மாநாட்டில் பிரதமர் நேரு கலந்து கொண்டார்.

·         பள்ளி அலுவல் நாட்களை 180 லிருந்து 200 ஆக காமராசர் உயர்த்தினார்.

·         ஆசிரியர் நலனைக் காக்க ஆசிரியர் ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்தார்

·         மாணவர்களிடம் ஏற்ற தாழ்வற்ற நிலையை உருவாக்கும் பொருட்டு பள்ளிகளில் சீருடைத் திட்டத்தை காமராசர் அறிமுகப்படுத்தினார். பின்னர் ஏழை மாணவர்களுக்கு இலவச சீருடையும் வழங்கினார்.

·         1960  இல் கட்டாயக்கல்வியை அறிமுகப்படுத்திய காமராசர், 1962-ல் அதை மாநிலம் முழுவதும் கொண்டு வந்தார்.

·         காமராசரின் மதிய உணவுத் திட்டத்தைப் பற்றி கேள்விப்பட்ட CARE என்னும் அமெரிக்க நிறுவனம் ஆனது 1961-1962 கல்வி ஆண்டில் தமிழக பள்ளி மாணவர்களுக்கு பால்பவுடர் மற்றும் சில பொருட்களை கிடைக்கச் செய்தது.

·         ஆங்கிலேயரின் ஆட்சியில் தமிழகத்தின் 7% ஆக இருந்த கல்வி கற்போரின் எண்ணிக்கை காமராசரின் ஆட்சியில் 37% ஆக உயர்ந்தது.

·         1957 இல் நடைபெற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 151 இடங்களை கைப்பற்றியது. காமராசர் இரண்டாவது முறையாக முதல் அமைச்சர் ஆனார். 

பச்சைத்தமிழன். 

·         1956, டிசம்பர் 27 இல் தமிழக அரசின் ஆட்சி மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டது.

·         1957-58 ஆண்டிற்கான பட்ஜெட் ( ஆண்டு நிதிநிலை அறிக்கை) ஆனது முதல் முறையாக தமிழில் தயாரித்து அளிக்கப்பட்டது.

·         1959 இல் தமிழறிஞர்களை உறுப்பினர்களாக கொண்ட தமிழ் வளர்ச்சி ஆரய்ச்சிமன்றம் அமைக்கப்படது. இதன் பரிந்துரைப்படி 1960-61 இல் கோவை அரசினர் கலைக் கல்லூரியில் B.A. வகுப்பில் தமிழ்பயிற்று மொழியாக அறிமுகமானது.

·         1960ஆம் ஆண்டு இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக காமராசர் ஆட்சியில் தான் தமிழ் மொழியில் கலைக்களஞ்சியம் (கலைச் சொல் அகராதி) உருவாக்கப்பட்டது

·         தமிழில் பாட நூல்களை வெளியிட தமிழ் நூல் வெளியீட்டுக்கழகம் துவங்கப்பட்டது.

·         பெரியார் காமராசரை முதன் முதலாக பச்சைத்தமிழன் என அழைத்தார்.

 

முற்போக்குச் சட்டங்கள்: 

·         இந்தியாவிலேயே முதல் முறையாகப் பொது நூலகச் சட்டம் ஒன்றை காமராசர் கொண்டு வந்து அதிகமான நூலகங்களை திறந்தார்.

·         இவரின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சென்னை பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம். 1955 ஆனது பண்ணையாட்களின் நலனை உறுதி செய்தது.

·         1958 இல் இவர் சென்னை மாநில ஊராட்சி சட்டத்தை கொண்டு வந்தார் இதன் மூலம் அதிக அளவில் 12000 ஊராட்சிகளுக்கு 375 ஊராட்சி ஒன்றியங்களும் உருவாக்கப்பட்டன.

·         காமராசரின் ஆட்சியில் 1961-இல் சென்னை மாநில நிலச்சீர்த்திருத்தங்கள் (நில உச்சவரம்பு வரையறுத்தல்) சட்டம் கொண்டு வரப்பட்டது இச்சட்டம் ஆனது 5 பேர் உள்ள குடும்பத்திற்கு 30 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பத்தை ஒழுங்குப்படுத்தியது.

வளர்ச்சித்திட்டங்கள்:

·         1957  இல் மாநில தொழில் வளர்ச்சிக் குழுமம் ஒன்றை அமைத்தார். இக்குழுவினால் அதிகளவில் தொழிற்பேட்டைகள் தமிழத் அளவில் தொடங்கப்பட்டன.

·         மேட்டூர் காகிதத் தொழிற்சாலை, மேட்டூர்கால் வாய்த்திட்டம், காவேரிடெல்டா அபிவிருத்தி திட்டம் போன்றவை இவரால் கொண்டு வரப்பட்டது.

·         1958-இல் மணிமுத்தாறு அணைகட்டப்பட்டது. மேலும் அமராவதி அணையும் உருவானது.

·         பரம்பிக் குளம் –ஆழியாறு நீர்ப்பாசனத் திட்டம் ஆனது தமிழ்நாடு-கேரளா ஆகிய இரு மாநிலங்களின் ஒத்துழைப்புடன் நிறை வேற்றப்பட்டன.

·         இவரின் ஆட்சியில் குந்தாமின் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அப்போதைய தொழிற்துறை அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் (பின்னாளில் குடியரசு தலைவர் ஆனார்) மூலகாரணமாக இருந்தார்.

·         இவரின் ஆட்சியில் தமிழ்நாடு வேளாண்மை, தொழில், கல்வி, மருத்துவம் என அனைத்து துறையில் முன்னேற்றம் கண்டது

·         இவரின்ஆட்சியில் மின் உற்பத்தி அதிகமாக்கப்பட்டது. இதனால் அதிக அளவில் கிராமங்கள் மின் இணைப்பை பெற்றன மேலும் புதிதாக அதிகளவு தொழிற்சாலையையும் தொடங்கப்பட்டன.

·         தமிழகத்தில் காமராசர் செயல்படுத்திய திட்டங்கள் சோஷியலிசத்தை (சமதர்மம்) உருவாக்கும் நோக்குடன் அமைந்திருந்தன. ஆதலால் இவர் ஜனநாயக சோஷியலிச சிற்பி என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.

·         மத்திய அரசின் முக்கியமான திட்டங்களை தமிழகத்தில் கொண்டு வந்த பெருமை காமராசரையே சேரும்.

1)     நெய்வேலிபழுப்பு நிலக்கரி (கிழக்கு ஜெர்மனி உதவியுடன் மத்திய அரசின் திட்டம்) (காமராசரின் தனிப்பட்ட முயற்சியால் கொண்டு வரப்பட்டது).

2)   நெய்வேலி அனல் மின்திட்டம் (ரஷ்யா உதவி)

3)   சென்னை ரயில் பெட்டித் தொழிற்ச்சாலை (சுவிட்சர்லாந்து உதவி)

4)     இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை (இத்தாலி உதவி)

5)      ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை (பிரான்ஸ் உதவி)

6)     திருச்சிபெல் (BHEL) நிறுவனம்.

7)     மணலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்.

8)      சென்னை ஆவடி பீரங்கி வண்டித் தொழிற்சாலை.

·         காங்கிரஸின் திட்டங்களை பரப்புரை செய்யும் நோக்கில் காமராசரின் வழிகாட்டுதலின் பேரில் 1960 இல் நவசக்தி என்னும் நாளிதழ் துவக்கப்பட்டது (ஆசிரியர்.டி.எஸ். சொக்கலிங்கம்)

·         1962 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 139 இடங்களில் வென்று காமராசர் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைத்தது. காமராசர் 3-வது முறையாக தொடர்ந்து முதலமைச்சர் ஆனார்.

·         1954 முதல் 1963 வரை காமராசர் ஒன்பது ஆண்டுகள் முதலமைச்சராகப் பணியாற்றினார்.

 

 கே-பிளான்:

  •          கே-பிளான் (காமராசர் திட்டம்) 1962-ம் ஆண்டின் சீனப்போருக்கு பிறகு காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளதை உணர்ந்த பிரதமர் நேரு காமராசரை ஐதராபாத்தில் சந்தித்தார். அப்பொழுது காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த காமராசர் வகுத்த திட்டம் காமராசர் திட்டம் அல்லது K PIan என அழைக்கப்பட்டது.

  •          இத்திட்டத்தின் படி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அரசியலமைப்பு பதவியிலிருந்து விலகி கட்சிப் பணி ஆற்றவேண்டும்.

  •          இத்திட்டத்தின்படி முதல் நபராக காமராசர் முதலமைச்சர் பதவியை 1963 அக்டோபர்-2 இல் துறந்தார்.

  •          காமராசரைத் தொடர்ந்து நேருவைத் தவிர்த்து மொரார்ஜிதேசாய் உட்பட பலர் அரசுப் பதவியிலிருந்து விலகி கட்சிப்பணிக்கு திரும்பினர்.

  •          காமராசர் பதவி விலகுவதுதற்கு கொலைக்குச் சமமானது என்று பெரியார் குறிப்பிட்டார்.

 

அகில இந்திய தலைவர்:

 

  •          காமராசர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக 1964-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்வரும் காங்கிரஸ் கூட்டத் தொடருக்கு இவர் தலைமை வகுத்தார்.

  •          புவனேஷ்வர் (1964)

  •          துர்காபூர் (1965)

  •          ஜெய்ப்பூர் (1966)

  •  1964 மே 27-இல் பிரதமர் நேரு காலமானதும் லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் பதவியில் அமர காமராசர் பெரும் பங்குவகித்தார்.

·       

  •    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவராக காமராசர் பணியாற்றிய பொழுது டி.பிரகாசம், ஒமந்தூர் ராமசாமிரெட்டியார், குமாரசாமி, ராஜா போன்றோர் முதலமைச்சராக வருவதற்கு காரணமாக இருந்தார்.

  •          அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித்தலைவராக காமராசர் பணியாற்றிய பொழுது லால்பகதூர் சாஸ்திரி , இந்திராகாந்தி ஆகியோர் பிரதமராக உறுதனையாக நின்றார்.

  •          முதலமைச்சர் பிரதமர் பதவிகளுக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்ததால் இவர் பெருமையுடன் கிங்மேக்கர் (ஆட்சியாளர்களை உருவாக்குபவர்) என அழைக்கப்படுகிறார்.

  •          1965 ஜனவரி 25- இல் தமிழகத்தில் தொடங்கிய இந்தி எதிர்ப்பு போராட்டம் ஆனது காங்கிரசின் செல்வாக்கை குறைத்தது. இதனால் காமராசர் 1967-இல் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

  •          காமராசர் 1967-ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

 

இறுதிகாலம்: 

         1969 இல் காங்கிரசின் தலைவர்களிடம் கருத்து வேறுபாடு உருவாகி அகில இந்திய காங்கிரஸ் இரண்டாக பிரிந்தது.                   .                      
  •          1969-இல் நாகர்கோவில்நாடாளுமன்றஇடைத்தேர்தலில் பெரும் வெற்றிபெற்றார்.

  •          1971 சட்டமன்றத் தேர்தலில் காமராசர் தலைமையிலான காங்கிரஸ (0) ஆனது ராஜாஜியின் சுதந்திரக்கூட்டணி. அமைத்து போட்டியிட்டது ஆனால் காங்கிரஸ் (O) ஆனது 15 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது.

  • ·         காமராசர் 1975 அக்டோபர் 2- இல் இயற்கை எய்தினார்.

  •  அவரின் நல்லுடலானது அரசுமரியாதையுடன் சென்னை-கிண்டியில் அடக்கம் செய்யப்பட்டது.

·         இவரின் மறைவுக்கு பின்னர் 1976-ல் பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டது.


 

No comments:

Post a Comment