ICC WORLD TEST Championship Final - 2021 Winner
உலக டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து சாம்பியன்
v இந்தியா – நியுசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் கடந்த 18-ந் தேதி தொடங்கியது.
v இதில் முதல் 4 நாட்களில் 2 நாள் ஆட்டம் மழையால் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
v இதற்க்கு மத்தியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களும், நியுசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 249 ரன்களும் எடுத்தன
v 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 73 ஓவர்களில் 170 ரன்களுக்கு சுருண்டது.
v நியுசிலாந்து அணிக்கு 53 ஓவர்களில் 139 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
v குறைவான ஸ்கோர் என்பதால் நியுசிலாந்து வீரர்கள் நம்பிக்கையுடன் பேட்டிங் செய்தனர்
v நியுசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 45.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
v நியூசிலாந்து அணி உலக அளவிலான போட்டியில் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
பரிசுத்தொகை
v 2 – வது இன்னிங்சில் மட்டும் இந்திய அணி கூடுதலாக ஒரு மணி நேரம் தாக்குபிடிதிருந்தால் இந்த டெஸ்ட் டிராவில் முடிந்து கோப்பையை பகிந்திருக்கலாம்.
v வாகை சூடிய நியுசிலாந்து அணிக்கு கோப்பையுடன் ரூ.11 ¾ கோடியும், 2 – வது இடம் பிடித்த இந்திய அணிக்கு ரூ.5 ¾ கோடியும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது
வரலாற்றில் இடம் பிடித்த வில்லியம்சன்
v 1975 ஆண்டில் முதல் முறையாக நடந்த கடந்த 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் கிளைவ் லாயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி மகுடம் சூட்டியது.
v 2007 ஆண்டு அறிமுகமான முதலாவது 20 – வது உலக கோப்பை போட்டியில் டோனி வழி நடத்திய இந்திய அணி பட்டம் வென்று வரலாறு படைத்தது.
v இப்போது முதல் முறையாக அரங்கேறிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான நியுசிலாந்து அணி பட்டத்தை முதல் முறையாக வென்றது.
No comments:
Post a Comment